சண்டபார்க்கவர்

முதன்மை ஹோதாவான சண்டபார்க்கவர் எழுந்து வணங்கி தர்ப்பையை அவர் கையில் கொடுத்து வேள்வியை முடிக்கும்படி கோரினார். கடலோரத் திராவிடச்சேர நாட்டிலிருந்து வந்திருந்த சண்டபார்க்கவர் பிருகுவின் மைந்தரான சியவன முனிவரின் குருகுலத்தைச் சேர்ந்தவர். நால்வகை வேதங்களில் அதர்வத்தை முதன்மையாக்கி, பூதயாகங்களை முதல்முறைமையாகக் கொண்டு, யோகானுஷ்டானங்கள் வழியாக பிரம்மத்தை அணுகும் சியவன முறை தென்மேற்குத் திராவிடத்திலும் வங்கத்திலும் மட்டுமே தழைத்திருந்தது. சண்டபார்க்கவர் தர்ப்பையை நாகவிரலில் கட்டுவதைக் கண்டதுமே ஆஸ்திகன் அவர் தான் கற்ற சியவன குருகுலத்தவர் என்பதைக் கண்டுகொண்டான்.

Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-NoDerivs 3.0 License