மானசாதேவி ஆஸ்திகனுக்கு சொல்லும் கதை

வெண்முரசின் முதல் அத்தியாயம் வேசரதேசத்தில் நாகர்குலத் தலைவியான மானசாதேவி தன் ஆஸ்திகனுக்கு சொல்லும் கதையுடன் துவங்குகிறது.

"இருள் முதல்முடிவற்றது. ஆதியில் அதுமட்டும்தான் இருந்தது. வானகங்கள் அனைத்தும் அந்த இருளுக்குள்தான் இருந்தன. அந்த இருள் ஒரு மாபெரும் நாகப்பாம்பின் வடிவிலிருந்தது. கற்பனையும் கனவும் தியானமும் எட்டமுடியாத அளவுக்கு நீளம்கொண்ட அந்த நாகம் கண்களற்றது" எனத் துவங்கும் கதை பிரபஞ்ச உருவாக்கத்தைப் பற்றிய நாகதரிசனமாக விரிகிறது.

ஆசிரியர் ஜெயமோகனின் வார்த்தைகளில் : "அந்த முதல்படிமம் பிரபஞ்சம் உயிர்பெறுவதற்கு மட்டும் அல்ல மனிதனுக்குள் யோகவல்லமை உயிர்பெறுவதற்கும் சமமாகப் பொருந்தும் உருவகம்"

Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-NoDerivs 3.0 License